All
Looks like you've blocked notifications!

மறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்த நினைவலைகளை அவரது கணவர் போனி கபூர், ஸ்ரீதேவியின் டுவிட்டர் அக்கவுண்டில் கடிதமாக டுவீட் செய்துள்ளார்.

 

அதில், "குடும்பத்தார், நண்பர்கள், எங்கள் நலம் விரும்பிகள், ஶ்ரீதேவியின் கோடிக்கணக்கான ரசிகர்கள் என எல்லாருக்கும் என் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

 

இந்த தருணத்தில் எனக்கும், என் மகள்களுக்கும் உறுதுணையாக இருக்கும் அர்ஜுன் மற்றும் அஷூலாவின் (போனி கபூரின் முதல் மனைவி பிள்ளைகள்)) ஆதரவு கிடைத்துள்ளதை நான் ஆசீர்வாதமாகக் கருதுகிறேன்.  

 

ஒரு நடிகையாக அவர் இடத்தை யாராலும் நிரப்ப இயலாது. ஶ்ரீதேவியின் ரசிகர்களுக்கு ஒன்று சொல்ல நினைக்கிறேன். உங்களுக்கு ஶ்ரீதேவியிடம் பேச வேண்டுமானால், அவருடைய நினைவுகளும் திரைப்படங்களும் உங்களை ஶ்ரீதேவியிடம் அழைத்துச் செல்லும்.

 

என் முழு கவனம், அக்கறை எல்லாமே குஷியையும், ஜான்வியையும் நல்வழியில் வழி நடத்துவதில்தான் உள்ளது. அமைதி கொள் அன்பே! நீ இல்லாத வாழ்க்கை எப்படி இருக்குமோ?,'' என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

BY MANJULA | MAR 1, 2018 11:20 PM #SRIDEVI #BONEYKAPOOR #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People