தொடரும் சோதனை: 'சேப்பாக்கத்தைத்' தொடர்ந்து புனேவிலும் 'ஐபிஎல்' போட்டிகள் நடப்பதில் சிக்கல்?
Home > News Shots > தமிழ்By Manjula | Apr 13, 2018 05:33 PM
காவிரி,ஸ்டெர்லைட் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக்கூடாது என, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தின.
இதனால், சென்னையில் நடைபெறவிருந்த அனைத்து போட்டிகளும் தற்போது வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமின்றி சென்னை அணியின் வீரர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் ஐபிஎல் போட்டிகளை புனேவில் நடத்தத் தடைகோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், `மக்களுக்கே தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலில், புனே மைதானத்தைப் பராமரிக்கப் போதுமான தண்ணீர் இருக்கிறதா. அதற்குத் தேவையான தண்ணீரை எப்படி ஏற்பாடு செய்வீர்கள்’ என மகாராஷ்ட்ரா கிரிக்கெட் சங்கத்துக்குக் கேள்வி எழுப்பியுள்ளது.
இதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் (15.4.18) சென்னை-பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி, வேறு மைதானத்துக்கு மாற்றப்படுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.