'ரூபாய் 100 கோடி தருவதாக ஆசை காட்டுகின்றனர்'.. குமாரசாமி பகீர் குற்றச்சாட்டு!
Home > News Shots > தமிழ்By Manjula | May 16, 2018 01:17 PM
புகைப்பட உதவி @ANI
காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் முடிவில்தான் இன்று எம்எல்ஏ-க்கள் கூட்டத்தை கூட்டி இருக்கிறோம். ஆதலால், இதைத் தவிர்த்து வேறு எந்த முடிவும் நாங்கள் எடுக்கப்போவதில்லை என மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி இன்று காலையில் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ரூ.100 கோடி தருகிறேன், அமைச்சர் பதவி தருகிறேன் என எம்.எல்.ஏக்களுக்கு பாஜக ஆசை காட்டுவதாக, குமாரசாமி பரபரப்பான குற்றச்சாட்டினை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "பாஜக-வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. ரூ.100 கோடி தருகிறேன், அமைச்சர் பதவி தருகிறேன் என எம்.எல்.ஏக்களுக்கு பாஜக ஆசை காட்டுகிறது. குதிரை பேரத்தில் பாஜக ஈடுபடும் நிலையில் வருமானவரித்துறை என்ன செய்கிறது. எங்கள் கட்சியை ஒழிக்க வேண்டும் என சிலர் செயல்பட்டதால் குறைந்த இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம்.
அதிகாரத்திற்காக ஆசைப்படவில்லை, பிரதமர் பதவியை நாட்டு நலனுக்காக உதறிவிட்டு வந்தது எங்கள் குடும்பம்.குதிரை பேரம் நடைபெறுவதை ஜனாதிபதியும், கவர்னரும் அனுமதிக்க கூடாது,'' என தெரிவித்துள்ளார்.