BMW கார் மோதி இளம் பெண் பலி..பாஜக எம்எல்ஏ மகனுக்கு பெயில்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Oct 09, 2018 06:53 PM
கோவா எம்.எல்.ஏ-வின் மகன் ஆடம்பரமான காரினை அதிவேகமான இயக்கி வந்ததால் உண்டான விபத்தில் 18 வயதுடைய பெண் உயிரிழந்தார். அவரது சகோதரி மருத்துவமனையில், பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார்.
நேற்று மாலை கர்நாடகாவின் எல்லையில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள பெல்கேம்-கோவா தேசிய நெடுஞ்சாலை-4 என்கிற இடத்தில் ஆடம்பரமான BMW காரில் அதிவேகமாக வந்துகொண்டிருக்கும்போது, சகோதரிகள் இருவரின் மீது பலமாக மோதியதால், இரு சகோதரிகளில் ஒருவர் பலத்த காயத்தோடு உயிர் தப்பியதாகவும், ஒரு சகோதரி பரிதாபமாக உயிரிழந்ததாகவும் கமிஷனர் ராஜப்பா தெரிவித்துள்ளார்.
மேலும் விபத்துக்குள்ளாக்கிய கெய்லின் காரினை அங்கிருந்த பொதுமக்கள் சிலர் கூடி, கல்லெடுத்து கண்ணாடியை உடைத்தும், காரை கொளுத்தும் நோக்கில் பற்றவைக்கவும் செய்தனர். அதிலிருந்து கெய்ல் மீட்கப்பட்டு, கைது செய்யப்பட்டிருந்தார். எனினும் தற்போது அவருக்கு பெயில் கிடைத்துள்ளது. மேலும் விபத்துக்குள்ளாக்கிய 27 வயது கெய்லின் தந்தை பாஜக எம்.எல்.ஏ-வான க்ளென் டிக்லோ என்பது குறிப்பிடத்தக்கது.