
நடிகர் கமல்ஹாசன் இன்று தனது அரசியல் பயணத்தை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து துவங்கியுள்ளார். இன்று மாலை மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் தனது கட்சி பெயர், கொடி, கொள்கை ஆகியவற்றை வெளியிடவுள்ளார்.
கமலின் இந்த அரசியல் பயணத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், "நடிகர் கமல் அரசியல் கட்சி ஆரம்பிப்பது தலைப்புச் செய்திகளாக இருக்கலாம், ஆனால் அவர் ஒருபோதும் தலைவராக முடியாது. திரைப்பட போட்டியை போல் கமல் அரசியல் கட்சி தொடங்குகிறார்," என கருத்து தெரிவித்துள்ளார்.
BY MANJULA | FEB 21, 2018 3:13 PM #KAMAL #TAMILISAISOUNDARARAJAN #கமல் #தமிழிசைசவுந்தரராஜன் #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories