
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே மானூர் பேருந்து நிறுத்தத்தில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள, கொடிக் கம்பத்தில் பறந்து கொண்டிருந்த அதிமுக கொடியை இறக்கி விட்டு பாஜக கொடி ஏற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தங்கள் கட்சி கொடிக்கம்பத்தில் பாஜக-வின் கொடி பறப்பதைக் கண்டு அதிர்ந்த அதிமுகவினர், உடனடியாக பாஜக கொடியை இறக்கியதோடு, இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் கீரனூர் போலீசார், அதிமுக கொடிக்கம்பத்தில் பாஜக கொடியை ஏற்றிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
BY SATHEESH | MAR 21, 2018 5:27 PM #BJP #AIADMK #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories