தங்கிச்சிய வெளிநாடு அழைத்துச் செல்ல, அண்ணன் எடுத்த விநோத முடிவு..மிரண்டுபோன போலீஸ்!
Home > News Shots > தமிழ்By Selvakumar | Jan 31, 2019 07:10 PM
வெளிநாடு செல்வதற்காக தனது தங்கையையே திருமணம் செய்து கொண்ட அண்ணனால் பஞ்சாபில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற வேண்டுமென்றால் குறைந்தது 6 ஆண்டுகளாவது அங்கு தங்கியிருந்திருக்க வேண்டும் என்பது அந்நாட்டிலுள்ள விதிமுறைகளுள் ஒன்று. ஆஸ்திரேலிய குடியுரிமையைப் பெற்றிருந்த அந்த இளைஞன் தனது தங்கைக்கும் குடியுரிமை வாங்கித் தர எண்ணியுள்ளார்.
இதனால் அந்த இளைஞர் அவரது தங்கையை திருமணம் செய்து கொண்டதாக பஞ்சாப் மாநிலத்திலுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். பின்னர் அந்த சான்றிதழை ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற வேண்டுவதற்கான சான்றிதழ்களுடன் இணைத்துள்ளார்.
இதனையடுத்து ஆஸ்திரேலிய போலீஸ் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் அண்ணன், தங்கை என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்நாட்டில் இதற்காக எந்த சட்டமும் இல்லாததால் அவர்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என அந்நாட்டு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் கூறிய ஆஸ்திரேலிய காவல்துறையினர் வெளிநாடு செல்வதற்காக பலரும் பலவிதமாக மோசடி செய்துள்ளதாகவும், ஆனால் இந்த மாதிரியான மோசடி இதுவே முதல் முறை எனவும் கூறியுள்ளனர்.