ரயில்விபத்து: தடம் புரண்ட 11 பெட்டிகள்.. திகைக்க வைத்த நொடிகள்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 04, 2019 01:31 PM

பீகார் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

bizarre - 11 coaches affected due to Seemanchal Express derailment

சீமாஞ்சல் என்னும் எக்ஸ்பிரஸ் ரயில், டெல்லியில் உள்ள ஆனந்த் விஹாரியில் இருந்து பீகார் மாநிலம் ஜோக்பானி என்னும் இடத்துக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் நேற்று அதிகாலை பீகாரில் உள்ள ஜோக்பானியிலிருந்து டெல்லியின் ஆனந்த் விஹார் நோக்கி வந்துகொண்டிருந்தது.

அப்போது பீகாரின் வைஷாலி என்கிற பகுதியில் ரயில் வந்துகொண்டிருந்தபோது திடீரென ரயில் தடம் புரண்டுள்ளது. அதில் ரயிலில் உள்ள 11 பெட்டிகள் தடம் புரண்டு கீழே விழுந்துள்ளன. இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 20 -க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதனையடுத்து ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான தகவலை அறிந்ததும், மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்களும் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பீகார் மாநில முதலமைச்சர்  நிதீஷ்குமார் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர். மேலும் இறந்தவர்களில் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும், படுகாயம் அடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் ரயில்வே துறை அறிவித்துள்ளது. 

Tags : #BIHARTRAINDERAILMENT #BIZARRE #PEOPLE #DEATH