'1 கோடி' ரூபாய் சம்பளம் இந்தியப்பெண்ணுக்கு அடித்த 'ஜாக்பாட்'
Home > News Shots > தமிழ்By Manjula | May 09, 2018 12:18 PM
பீகாரின் பாட்னாவைச் சேர்ந்த இளம்பெண் மதுமிதா ஷர்மா (25) சுவிட்சர்லாந்தின் கூகுள் நிறுவன தொழில்நுட்பப் பிரிவில் பொறியாளராகப் பதவியேற்றுள்ளார். இதற்காக இவர் பெறவிருக்கும் சம்பளம் இந்திய ரூபாய் மதிப்பில் ஆண்டுக்கு சுமார் 1 கோடி ரூபாய் ஆகும்.
பி.டெக் பொறியியலாளரான மதுமிதாவுக்கு மைக்ரோசாப்ட், அமேசான், மெர்சிடஸ் ஆகிய மிகப்பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வந்தன.ஆனால் தனது கனவு கூகுள் நிறுவனம் தான் என்பதால், கடினமாக உழைத்து தனது கனவை அவர் நிறைவேற்றிக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து மதுமிதாவின் தந்தை சுரேந்திர குமார், " பெண்களுக்கு இன்ஜீனியரிங் ஏற்ற துறை இல்லை என்று முதலில் மறுத்து விட்டேன். அடம்பிடித்து இந்த படிப்பில் சேர்ந்தாள். நான் மறுத்ததை நினைக்கையில் மிகப்பெரிய தவறு செய்யவிருந்தேன்,'' எனத் தோன்றுகிறது என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.