எதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னர் அவுட்?.. ரசிகர்கள் அதிர்ச்சி!
Home > News Shots > தமிழ்By Manjula | Sep 23, 2018 12:31 AM
![Biggboss Tamil: Yaashika Anand evicted from this week Biggboss Tamil: Yaashika Anand evicted from this week](https://i2.behindwoods.com/news-shots/images/tamil-news/biggboss-tamil-yaashika-anand-evicted-from-this-week.jpg)
பதினாறு போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த வாரம் டபுள் எவிக்சன் இருக்கும் என ஏற்கனவே கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.
அந்தவகையில் இன்று பிக்பாஸ் வீட்டில் ஒரே ஆணாக தாக்குப்பிடித்து வந்த பாலாஜி வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து 2-வதாக மிகவும் வலிமையான போட்டியாளர், கண்டிப்பாக டைட்டில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட இளவயது போட்டியாளர் யாஷிகாவும் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
நேற்று யாஷிகாவுக்கு 5 லட்சம் பரிசாக அளித்தபோதே பிக்பாஸ், யாஷிகாவை வீட்டைவிட்டு வெளியில் அனுப்பப் போகிறார் என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் ரசிகர்களால் பரவலாக பதிவிடப்பட்டது.
யாஷிகா வெளியேற்றத்தின் மூலம் அது தற்போது நிரூபணமாகியுள்ளது. நாளைய எபிசோடில் யாஷிகா வெளியேறுவதை பார்க்கலாம். இளவயது போட்டியாளராக இருந்தாலும் தொடர்ந்து டாஸ்க்குகளில் தனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்திய யாஷிகாவை வெளியில் அனுப்பியதால் டைட்டில் வெல்லப்போவது யார்? என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)