கலவர வழக்கு: ’பீம் ஆர்மி’ சந்திரசேகர் ஆசாத் விடுதலை!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Sep 14, 2018 04:40 PM
உத்திர பிரதேசத்தில் ஜாதி கலவர வழக்கில் கைதானவர் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்.
இவரது உண்மையான பெயர் ரேவன், இவர் கடந்த சில நாட்களுக்கு முன் நிகழ்ந்த பீமா கொரிகோன் என்கிற அம்பேத்கர் நினைவுக் கொண்டாட்ட விழா தொடர்பான கூட்டத்தில் பாஜக -வுக்கு வாக்களிப்பதற்கு முரணான கருத்துக்களை மக்களிடம் பரப்பி வந்ததை அடுத்து, கலவர வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் பீம் ஆர்மி என்கிற அமைப்பு மற்றும் பல்வேறு தலித், மக்கள் உரிமை அமைப்பினரும் அரசியலாளர்களும் இந்த கைதுக்கு எதிராக குரல் கொடுத்தனர். இதேபோல் மற்ற சில அமைப்புகள் ஆதரவாகவும் குரல் கொடுத்ததை அடுத்து பீம் ஆர்மி தலைவரான சந்திரசேகர் ஆசாத்தை விடுதலை செய்யச்சொல்லி , நேரடியாக உத்திர பிரதேச மாநில அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags : #CHANDRASHEKHARAZAD #UTTERPRADESH #BHIMARMYFOUNDER