
பிஹைண்ட்வுட்ஸ் விருதுகள் 2018: விஜய் சாருக்காக 'ஆளப்போறான் தமிழன்' எழுதியதில் பெருமை!
Home > News Shots > தமிழ்By Manjula | Jun 17, 2018 06:02 PM

2018-ம் ஆண்டிற்கான 'பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு மெடல் விருதுகள்' சென்னை ட்ரேட் சென்டரில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சிறந்த பாடலாசிரியர் விருதை 'ஆளப்போறான் தமிழன்' பாடலுக்காக விவேக் வென்றார்.
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கையால் இந்த விருதை வாங்கிய பாடலாசிரியர் விவேக் இதுகுறித்து பேசுகையில், ''ரொம்ப நாள் ஆசைப்பட்டு எழுதின பாட்டு இது. பாடலின் முதல் வரியே 'ஆளப்போறான் தமிழன்' அதுதான்.
நிறைய வலிகளுக்கு இடையே இந்த விருது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. முதலில் ரஹ்மான் சாருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பாடல் ஒரு பெரிய சுமையை தாங்கி வருது. அந்த சுமையை தளபதி சார் தான் சுமக்க முடியும்.
தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்த, விஜய் சாருக்காக இந்த பாடலை எழுதியதில் பெருமைப்படுகிறேன். எனக்கு வாய்ப்பளித்த அட்லீ சாருக்கும் நன்றி,'' என்றார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS
- துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு... நடிகர் விஜய் நேரில் ஆறுதல்!
- 'தளபதி 62' படக்குழுவுடன் கைகோர்த்த 'பிரமாண்ட' நிறுவனம்!
- 'யார் மீதும் காதலில் விழுந்து விடாதே'.. பிரபல நடிகைக்கு 'அட்வைஸ்' செய்த தளபதி!
- 'பிரியமான இளையதளபதி அண்ணா'.. இளம் இயக்குநரை துள்ளிக்குதிக்க வைத்த தளபதி!
- மெர்சலைத் தொடர்ந்து எனது 'அடுத்த படம்' இதுதான்; அட்லீ