'சிம்பு-விஷால்' இருவரில் யாருக்கு முத்தம் கொடுப்பீர்கள்?
Home > News Shots > தமிழ்By Manjula | Dec 16, 2018 08:28 PM
6-வது பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு மெடல் விருதுகள் தற்போது சென்னை டிரேட் செண்டரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நட்சத்திரங்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து வருகின்றனர்.
இதில் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு சர்கார்,சண்டக்கோழி படங்களுக்காக 'பெஸ்ட் ஆக்டர் இன் வில்லன் ரோல் (Female) விருது வழங்கப்பட்டது.
அப்போது அவரிடம் ஒருவருக்கு கிஸ் கொடுப்பேன், ஒருவரைக் கொலை செய்வேன் மற்றும் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வேன் என்றால் உங்கள் சாய்ஸ் யார்? என கேட்கப்பட்டது.
பதிலுக்கு வரலட்சுமி,''சிம்புவுக்கு முத்தம் கொடுப்பேன். விஷாலைக் கொலை செய்வேன். மற்றும் யாராவது ஒருவரைத் திருமணம் செய்வேன்,'' என்றார். தொடர்ந்து கண்டிப்பாக படம் இயக்குவேன் மற்றும் அரசியலுக்கு கண்டிப்பாக வருவேன்,'' என்றார்.