இந்திய வீரர்களின் உணவில் 'மாட்டு இறைச்சி' வேண்டாம்; பிசிசிஐ வேண்டுகோள்
Home > News Shots > தமிழ்By Manjula | Nov 01, 2018 04:38 PM
இந்திய வீரர்களின் உணவில் மாட்டு இறைச்சி வேண்டாம் என, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு பிசிசிஐ வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நவம்பர் மாதம் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவிருக்கிறது. இந்த நிலையில் வீரர்களுக்கு வழங்கும் உணவில் மாட்டு இறைச்சி வேண்டாம் என, பிசிசிஐ ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தை கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவினை பிசிசிஐ புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதில் மாட்டு இறைச்சி இடம் பெற்றிருந்ததைக் கண்ட நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதனால் இந்த வேண்டுகோளை பிசிசிஐ விடுத்ததா? இல்லை வேறு ஏதேனும் காரணங்களா? என்பது தெரியவில்லை.
Tags : #CRICKET #VIRATKOHLI #INDIATOUROFENGLAND #BCCI #AUSTRALIA