'புதுசு புதுசா யோசிக்கிறாங்க பா'.... புதிய முறையில் ‘டாஸ்’...ஆஸ்திரேலிய தொடரில் அறிமுகம்!
Home > News Shots > தமிழ்By Jeno | Dec 11, 2018 10:47 PM
ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள உள்ளூர் தொடரான ‘பிக் பாஷ்’ ‘டி–20’ தொடரில் புதிய முறையில் ‘டாஸ்’ அறிமுகம் செய்யவுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில்,ஆண்கள், பெண்கள் என இருவருக்குமான உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான பிக் பாஷ் தொடர் நடக்கிறது.இந்த தொடரின் போது தான்,ஸ்டம்ப் மீது லைட் பைல்ஸ்களை வைக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு உலகம் முழுதும் நல்ல வரவேற்பு கிடைத்து.தற்போது ‘பேட் டாஸ்’என்னும் முறை அறிமுகம் ஆக உள்ளது.
வரும் டிசம்பர் 19-ல் தொடங்க இருக்கும் பிக் பாஷ் டி–20 தொடரில்,காயினுக்குப் பதில் போட்டி நடக்கும் இடத்தை சேர்ந்த அணியின் கேப்டன் 'பேட்’டை மேலே துாக்கிப் போடுவார். இதில் பேட் மேல் பகுதி (மேடான), அல்லது கீழ் பகுதி (சமமான) வேண்டும் என மற்றொரு கேப்டன் கேட்பார். வெல்வதற்கு ஏற்ப பேட்டிங், பவுலிங் செய்வது முடிவாகும்.
இந்த முறை நிச்சயம் ரசிகர்களை கவரும் என,ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எதிர்பார்க்கிறது.