கிறிஸ்துமஸ் தாத்தாவாக சென்று குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முன்னாள் அதிபர் ஒபாமா!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Dec 20, 2018 04:54 PM
வரவிருக்கும் கிறிஸ்துமஸை கொண்டாட பலரும் தயாராக உள்ள நிலையில், இப்போதே அதற்கான நிகழ்வுகள் தொடங்கிவிட்டன. குழுவாக சென்று இசைக்கலைஞர்கள் வாசிப்பது, கேக்குகளை தயாரிப்பது, குழந்தைகளை மகிழ்விக்கும் கிறிஸ்துமஸ் தாத்தாக்களை பார்க்க முடிவது என எல்லாம் களைகட்டி வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, சாண்டா தொப்பி அணிந்து கை நிறைய கிறிஸ்துமஸ் பரிசுகளை அள்ளி எடுத்துவந்து, குழந்தைகளுக்கு கொடுக்கும் ஒரு திடீர் கிறிஸ்துமஸ் தாத்தாவாக அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அமெரிக்காவின் தேசிய மருத்துவமனை ஒன்றுக்கு கிறிஸ்துமஸ் தாத்தாவாகச் சென்று இந்த பரிசுகளைத் தந்த ஒபாமா முந்தைய வருடம் இதே விதமாக மிடில் ஸ்கூலுக்குச் சென்றிருந்தார். இந்நிலையில் இந்த வருடமும் சாண்டா கெட்டப்பில் சென்ற ஒபாமாவை பார்த்ததும் மருத்துவமனையில் இருந்த குழந்தைகள் உற்சாகமாகியுள்ளனர். இந்த படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன.
இதுபற்றி பேசிய ஒபாமா, தனக்கு 2 பெண் பிள்ளைகள் இருப்பதால், குழந்தைகளை அன்பும் அக்கறையுமாக பார்த்துக்கொள்ளும் செவிலியர்கள், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களின் அரவணைப்பின் முக்கியத்துவம் தெரியும் என்றும், அவர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்தார்.
Thank you @BarackObama for making our patients’ day so much brighter. Your surprise warmed our hallways and put smiles on everyone’s faces! Our patients loved your company…and your gifts! https://t.co/bswxSrA4sQ ❤️ #HolidaysAtChildrens #ObamaAndKids pic.twitter.com/qii53UbSRS
— Children's National 🏥 (@childrenshealth) December 19, 2018