வெளியூர் சென்று வருவதற்குள் பணம், நகை கொள்ளை! வங்கி ஊழியருக்கு நேர்ந்த சோகம்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 04, 2019 06:29 PM

வங்கி அதிகாரி குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்த சமயம் அவரது வீட்டில் பணம், நகை கொள்ளை போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bank employee shocked. House looted after coming back from vacation

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டி என்கிற பகுதியில் வங்கி மேலாளரான சுனில்குமார் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் ஹைதராபாத் சென்றுள்ளார். பின்னர்  திரும்பி வந்து பார்க்கையில் வீட்டின் பின்புற ஜன்னல் உடைந்திருப்பதைப் பார்த்து குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனை அடுத்து வீட்டு லாக்கர் உடைக்கப்பட்டு நகை, பணம் கொள்ளை போயிருப்பதைப் பற்றி கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். சுனில்குமார் கொடுத்த புகாரை அடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதில், சுனில்குமார் வீட்டின் பின்புறத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால் கொள்ளையர்கள் இந்த வழியே வீட்டிற்குள் நுழைந்துள்ளதாகவும், ஆனால் சுனில்குமாரின் வீட்டின் பின்புறம் உள்ள மற்றொரு வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகியுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுனில்குமார் வீட்டிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் ரூ.80 ஆயிரம் பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும் கொள்ளை தொடர்பாக முக்கிய தடயங்கள் கிடைத்திருப்பதாகவும், உடனடியாக கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Tags : #CHENNAI #THEFT #ECR #ROBBERY