கஜா புயல்:'உயிரை துச்சமென மதித்து களமிறங்கிய நடத்துனர்':குவியும் பாராட்டுக்கள்!
Home > News Shots > தமிழ்By Jeno | Nov 16, 2018 12:40 PM
வங்க கடலில் உருவாகியுள்ள கஜா புயலின் வெளிப்பகுதி கரையை தொட்ட நிலையில் திருவாரூர், காரைக்கால், நாகை மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு, தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், புதுச்சேரி, காரைக்கால், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையிலிருந்து வேதாரண்யம் சென்ற அரசு பேருந்தின் நடத்துனர்,பாலபைரவன் என்பவர் வழியெங்கிலும் தாழ்வாக கிடந்த மின்கம்பங்களை உயர்த்தி பிடித்து பேருந்து செல்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார்.
சென்னையிலிருந்து புறப்பட்ட 'TN 68 N 0450' என்ற அரசு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வேதாரண்யம் கொண்டு சேர்க்கப்பட்டார்கள்.மிகுந்த சிரமத்திற்கு இடையில்,உயிரை துச்சமென மதித்து பயணிகள் அனைவரையும் பத்திரமாக கொண்டு சேர்ந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனரை பயணிகள் வெகுவாக பாராட்டினார்கள்.
#RealHeros #BalaBairavan who works as a conductor in TN State Transport corporation & look at his dedication to to go the extra mile to provide transport services to people... #Chennai- #Vedaranayam bus service #Respect #TN68N0450 #GajaCyclone #CycloneGaja #GajaCycloneUpdate pic.twitter.com/l2xT1oRhLU
— Shabbir Ahmed (@Ahmedshabbir20) November 16, 2018