திருச்சியில், வாகன சோதனையின்போது நிற்காமல் சென்ற உஷா - ராஜா தம்பதியினரின் இருசக்கர வாகனத்தை விரட்டிச்சென்று போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் உதைத்தார். இதில், இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உஷாவின் மரணத்தைத் தொடர்ந்து காமராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்குப் பின் போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், ஆய்வாளர் காமராஜ் தன்னை ஜாமீனில் வெளியிட வேண்டும் என திருச்சி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், அவரை ஜாமீனில் விடுவிக்க முடியாது என திருச்சி நீதிமன்றம் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.
BY SATHEESH | MAR 16, 2018 5:27 PM #TRICHYWOMANDEATH #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories