நாடி, நரம்புல CSK வெறி ஊறிப்போன ஒருத்தராலதான் இப்படிசெய்ய முடியும்..வைரல் ரசிகர்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Jan 27, 2019 04:24 PM
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தமிழகத்துக்கு மிகவும் நெருக்கமான ஒரு ஐபிஎல் அணி என்கிற வகையில் தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் நிகழும் பொதுநிகழ்வுகள் அனைத்தையும் கண்காணித்தும் கருத்து சொல்லியும் வருகிறது.
அதனாலேயே எப்போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதான பரவசம் ஐபிஎல் சீசனைத் தவிர்த்து, மற்ற நேரங்களிலும் பலருக்கும் குறைவதே இல்லை. அதற்கு இன்னும் சில அழகான காரணங்களும் இருக்கின்றன. ஐபிஎல் சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டம், தோனி உள்ளிட்ட அணி வீரர்கள் என பலவிதான காரணிகளையும் சொல்லலாம்.
அப்படித்தான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் தீவிரமாக அந்த அணியின் செயல்பாடுகளை தொடர்ந்து அவதானித்துக்கொண்டு வருகின்றனர். அடுத்து வரவுள்ள ஐபிஎல் சீசனுக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் பட்டியலை சில நாட்களுக்கு முன்பாக அந்த அணி அறிவித்தது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிதான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டன். அவரின் கீழ் இடம் பெற்றுள்ள அந்த அணி வீரர்கள் சூப்பர் லெவன் என்று அழைக்கப்படுகின்றனர்.
இந்த சூப்பர் லெவன் அணியினரை வரிசையாக நிற்கவைத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்தியாவில் கொண்டாடப்பட்ட நவராத்திரி கொலு பொம்மைகள் இணையத்தில் ஹிட் அடித்தன. அதில் சூப்பர் லெவன் அணி வீரர்களின் உருவ பொம்மைகளை கோகுலாஷ்டமி கொலுவாக வைத்துக்கொண்டதில் பலரும் ஆர்வம் காட்டினர்.
அந்த வகையில், மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிரமான இன்னொரு பரம ரசிகர் ஒருவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரதானமான ‘விசில் போடு’ என்கிற வார்த்தையை கார் ஒன்றின் பின்புறம் நம்பர் பிளேட்டில் எழுத்துக்களாக வருமாறு பதிந்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இந்த தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. கலிபோர்னியா என்று எழுதப்பட்ட சொல்லுக்கு கீழ், விசில் போடு என்கிற வார்த்தையை ஆங்கிலத்தில் ‘WHSL PDU’ என்று அந்த காரில் பதிந்திருப்பவர் எதார்த்தமாக அப்படி செய்திருக்கிறாரா அல்லது உண்மையில் சென்னை சூப்பர் கிங்ஸின் ரசிகரா என்பது தெரியவில்லை. இருப்பினும் அதனை புகைப்படம் எடுத்தவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகராகத்தான் இருக்க வேண்டும் என்பதை அந்த புகைப்படம் சுட்டிக்காட்டுகிறது.
The #Yellove for #WhistlePodu knows no bounds! 🦁💛😄 https://t.co/DObPc90LPr
— Chennai Super Kings (@ChennaiIPL) January 26, 2019