'இவர பாத்து கத்துக்கோங்க'...இவர போல ஒரு பிளேயர் நமக்கு கிடைப்பாரா...இந்திய வீரரை பார்த்து ஆதங்க பட்ட...ஆஸி. முன்னாள் கேப்டன்!
Home > News Shots > தமிழ்By Jeno | Jan 03, 2019 10:59 PM
அறிமுக டெஸ்ட்டில் இந்திய வீரர் மயங்க் அகர்வால் ஆடிய விதம் குறித்து பெருமையுடன் பகிர்ந்துள்ளார் முன்னாள் ஆஸி. கேப்டன் மார்க் டெய்லர்.
ஆஸ்திரேலியாவின் சிறந்த கேப்டன் என அனைவராலும் புகழப்படக்கூடிய மார்க் டெய்லர்,ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றிற்கு எழுதிய கட்டுரையில் இந்திய உள்நாட்டு கிரிக்கெட் அமைப்பை வெகுவாகப் பாராட்டி எழுதியுள்ளார்.அதிலும் இந்திய வீரர் மயங்க் அகர்வாலை வெகுவாக பாராட்டியுள்ளார்.மயங்க் அகர்வால் போன்ற ஒரு அறிமுக வீரர் மெல்போர்னில் செய்ததை,எந்த ஒரு ஆஸ்திரேலிய அறிமுக வீரராவது செய்ய முடியுமா? என அந்த கட்டுரையில் வினவியுள்ளார்.
மேலும் பாக்சிங் டே அன்று ஆஸ்திரேலிய பந்து வீச்சை மயங்க் அகர்வால் கையாண்ட விதம் குறித்து எழுதியுள்ள அவர் 'அறிமுக டெஸ்ட்டில் இவ்வாறு ஆடும் வீரர் நம்மிடம் உள்ளனரா என்ற கேள்வி என்னிடம் எழுந்தது.இந்திய அணியில் யாரை தொடக்க வீரர்களாக களமிறங்கச் செய்வது என்ற நெருக்கடி இருந்த போது,தொடக்க வீரராக வந்து அசத்தினார் மயங்க் அகர்வால்.இவர் தனது முதல் தர கிரிக்கெட்டில் 50 ரன்கள் சராசரி வைத்துள்ளார்.மேலும் அகர்வாலிடம் நல்ல பேட்டி திறன் உள்ளது.இது போன்ற வீரர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு நிச்சயம் தேவை என முன்னாள் ஆஸி. கேப்டன் மார்க் டெய்லர்.அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
அறிமுக வீரரான மயங்க் அகர்வாலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் மார்க் டெய்லர் புகழ்திருப்பது,அவரின் திறமைக்கு கிடைத்த பரிசு என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.