'தீவிரவாத குற்றச்சாட்டு'...பிரபல கிரிக்கெட் வீரரின் சகோதரர் திடீர் கைது!
Home > News Shots > தமிழ்By Jeno | Dec 04, 2018 11:21 AM
தனது நண்பரை வேண்டுமென்றே தீவிரவாத குற்றச்சாட்டில் சிக்கவைத்த குற்றச்சாட்டிற்காக,ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் உஸ்மான் கவாஜாவின் சகோதரர் கைது செய்யப்பட்டார்.
பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட உஸ்மான் கவாஜா,பேட்டிங்யில் மிகவும் திறம்பட செயல்பட்டு வருகிறார்.இதனால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டித்தொடரில் ஆஸ்திரேலிய அணியில் கவாஜா இடம் பெற்றுள்ளார்.உஸ்மான் கவாஜாவின் சகோதரர் அர்சகான் கவாஜா.இவரின் நெருங்கிய நண்பர் முகமது கமீர் நிஜாமுதீன்.
இந்நிலையில் நண்பர்களுக்கிடையே ஒரு பெண்ணை காதலிப்பதில் போட்டி எழுந்துள்ளது. இதனால் தனது நண்பர் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த அர்சகான்,ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்லை கொலை செய்ய முகமது கமீர் திட்டமிட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். அது தொடர்பாக நிஜாமுதீன் டைரியிலும் கொலைத்திட்டத்தையும் விளையாட்டாக எழுதிவைத்தார்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நிஜாமுதீன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.ஆனால் தன் மீதான குற்றச்சாட்டினை நிஜாமுதீன் தொடர்ந்து மறுத்து வந்தார்.இதில் திடீர் திருப்பமாக நிஜாமுதீனின் டைரியை கைப்பற்றிய போலீசார்,அதில் பிரதமர் டர்ன்புல்லை கொலை செய்யும் திட்டம் குறித்த விஷயம் இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர்.இதனால் காவல்துறையினரின் விசாரணை துரிதப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் அந்த டைரியில் இருக்கும் கையெழுத்து தன்னுடையது அல்ல என நிஜாமுதீன் மறுத்தார்.இதனால் காவல்துறையினர் கையெழுத்து சோதனை நடத்தினர்.அதன் முடிவில் அது நிஜாமுதீனின் கையெழுத்து இல்லை என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர்.இதனால் நிஜாமுதீன் விடுதலை செய்யப்பட்டார்.
மேற்கொண்டு விசாரணையை துரிதப்படுத்திய காவல்துறையினர்,முன்பகை காரணமாக உஸ்மான் கவாஜாவின் சகோதரர் அர்சகான் கவாஜா இதைச் செய்துள்ளார் என்பதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து இன்று அதிகாலை உஸ்மான் கவாஜாவின் வீட்டுக்குச் சென்று அவரின் சகோதரர் அர்சகான் கவாஜாவை கைது செய்தனர்.இது குறித்து நியூ சவுத்வேல்ஸ் போலீஸ் ஆணையர் மிக் வில்லிங் இன்று நிருபர்களிடம் கூறுகையில், “ நிஜாமுதீன் மிகவும் திட்டமிட்டு இந்தக் குற்றச்சாட்டில் சிக்கவைக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட விரோதம் காரணமாக அவர் மீது இந்தப் புகார் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். எனத் தெரிவித்தார்.