முன்னாள் பிரதமர் வாஜ்பாய் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!
Home > News Shots > தமிழ்By Manjula | Jun 11, 2018 03:37 PM
இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாஜக-வின் மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய்(93) உடல்நிலை காரணமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்து வருகிறார். நீண்ட காலமாக அரசியல் களத்தில் இருந்தும் விலகியே இருந்து வருகிறார்.
இந்நிலையில், வாஜ்பாயின் உடல்நிலை இன்று மதியம் மேலும் மோசமடைந்துள்ளது. இதனால் அவரை உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். டாக்டர் ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவக் குழுவினர் வாஜ்பாய்க்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பு இது ஒரு வழக்கமான உடல் பரிசோதனை என்றும், அவர் விரைவில் வீடு திரும்புவார் எனவும் தெரிவித்துள்ளது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
ABOUT THIS PAGE
This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Atal Bihari Vajpayee admitted to AIIMS in Delhi | தமிழ் News.