
'தான் புதிய நைக் காலணி வாங்கி விட்டதாகவும் அதன் மூலம் இனி அதிக வேகத்துடன் ஓட முடியும்' என்றும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதற்கு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கிப்ஸ், "நீங்கள் புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து விட்டீர்கள். அதனால் வேகமாக ஓடுவீர்கள்" என சென்னை சூப்பர் கிங்ஸின் மேட்ச் பிக்சிங்கை குறிக்கும் வகையில் கமெண்ட் செய்திருந்தார்.
இதற்கு அஸ்வின், "தான் கிரிக்கெட்டை உணர்வுப்பூர்வமாக விளையாடுவதாகவும், சிலருக்கு அது அப்படி இருப்பதில்லை" எனவும் பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த 2000-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்கா அணி இந்தியா வந்து விளையாடியபோது, கிப்ஸ் ஊழல் புகாரில் சிக்கியதை குறிக்கும் வகையில் அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
BY SATHEESH | FEB 20, 2018 10:13 AM #GIBBS #ASHWIN #MATCH FIXING #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories