பெரியார் சிலை விவகாரத்தில் எச்.ராஜாவுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நமக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில், "திரிபுராவில் கடந்த 25 வருடங்களாக கம்யூனிஸ்ட் அரசாங்கம் ஜனநாயக விரோத ஆட்சியை நடத்தி வந்தது.
திரிபுராவின் வளர்ச்சிக்கு தடையாக கம்யூனிச கொள்கை இருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது சென்னையில் நீல் சிலை அகற்றப்பட்டது போன்றுதான், திரிபுராவில் மக்கள் எழுச்சியின் காரணமாக லெனின் சிலை அகற்றப்பட்டது" என்று கூறினார்.
மேலும் இந்த விவகாரத்தில் ராஜா மிரட்டப் படுவதாகவும், தனிமைப்படுத்தப் படுவதாகவும் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அர்ஜுன் சம்பத் அளித்த முழு பேட்டியைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
BY SATHEESH | MAR 7, 2018 3:22 PM #HRAJA #ARJUNSAMPATH #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories