மறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்து, போனி கபூரின் முதல் மனைவியின் மகனும்-நடிகருமான அர்ஜுன் கபூர் மனந்திறந்துள்ளார்.
இதுகுறித்து சமீபத்தில் பாலிவுட் ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியொன்றில், " எனது தந்தையின் வாழ்வில் தொடர்புள்ள அனைவருக்கும் நான் மரியாதை கொடுப்பேன்.
ஏனெனில் எனது தந்தையும் என்னிடமிருந்து அதைத்தான் எதிர்பார்ப்பார். நான் ஸ்ரீதேவியை மதிக்கிறேன். ஆனால் அவருடன் அமர்ந்து எனது படங்கள் குறித்து நான் பேசியது கிடையாது.
அதேபோல அவரும் எனது படங்களை விரும்புகிறாரா என நான் கேட்டது இல்லை," இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
BY MANJULA | FEB 28, 2018 4:40 PM #SRIDEVI #SRIDEVIDEATH #ARJUNKAPOOR #ஸ்ரீதேவி #ஸ்ரீதேவிமரணம் #அர்ஜுன்கபூர் #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories