நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் துபாயில் உயிரிழந்தார். நடைமுறை பரிசோதனைகள் காரணமாக, நடிகை ஸ்ரீதேவியின் உடலை மும்பை கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ஸ்ரீதேவி உடலைக் கொண்டுவருவதில் தாமதம் ஏற்படுவதைத் தொடர்ந்து போனி கபூரின் முதல் மனைவி பையனும், நடிகருமான அர்ஜுன் கபூர் மும்பையிலிருந்து-துபாய்க்கு விமானத்தில் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மனைவியை இழந்து தவிக்கும் தனது தந்தைக்கு ஆதரவு அளிப்பதற்காக அர்ஜுன் கபூர் துபாய் சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.
BY MANJULA | FEB 27, 2018 2:46 PM #SRIDEVI #SRIDEVIDEATH #ARJUNKAPOOR #ஸ்ரீதேவி #ஸ்ரீதேவிமரணம் #அர்ஜுன்கபூர் #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories