'சஹானா பாடல் வேண்டாம் என்றேன்'.. இவர்தான் வைக்கச் சொன்னார்!
Home > News Shots > தமிழ்By Manjula | Nov 23, 2018 03:52 PM
ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளியான சிவாஜி படம் கடந்த 2007-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியான பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
குறிப்பாக உதித் நாராயணன், ரஹ்மான், சின்மயி குரல்களில் வெளியான சஹானா பாடல் இளைஞர்கள் மத்தியில் நல்ல ஹிட் அடித்தது.
இந்தநிலையில் சஹானா பாடலை தான் வேண்டாம் என்று சொன்னதாகவும், ரஹ்மான் தான் தன்னை கன்வின்ஸ் செய்து அப்பாடலை படத்தில் இடம்பெறச் செய்தார் என்றும் இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நமது தளத்திற்கு அவர் அளித்த எக்ஸ்குளூசிவ் பேட்டியில்,''ஆமா. எதிர்பார்ப்பு ரொம்ப பெருசா இருக்கு. ஒரு பாட்டு எந்தமாதிரி படத்துல வருது அப்படிங்கறது இருக்கு. இப்போ வந்து பெரிய ஸ்டார், பெரிய எதிர்பார்ப்பு இருக்குற படமுன்னு வரும்போது அவர் என்னோட விருப்பத்துக்கு விட்ருவாரு. சில சமயம் அவர் ரொம்ப ஸ்ட்ராங்கா நம்பும்போது ,சரி அப்படி போய்டலாம். அந்த சஹானா பாட்டை அவர் ரொம்ப ஸ்ட்ராங்கா நம்புனாரு. சரி அப்படினு அத பாலோ பண்ணோம்,''என்றார்.