ரன்-அவுட் பரிதாபங்கள்:"அசார் அலிகே டஃப் கொடுத்த ரன்-அவுட் சம்பவம்"!

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 20, 2018 04:23 PM
Another Hilarious Run out New Zealand Batsman goes viral

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அசார் அலி ரன் அவுடான விதம் கிரிக்கெட் வரலாற்றில் அரிதான ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது.

 

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தின்போது,ஆஸ்திரேலிய பவுலர் பீட்டர் சிடில் பந்து வீச, அதனை ஸ்லிப்பில் கட் செய்த அசார் அலி அது பவுண்டரிக்கு சென்றுவிடும் என்று கூலாக இருந்தார். பந்து மெதுவாக உருண்டு சென்று பவுண்டரி லைனுக்கு முன்னால் நின்று கொண்டது.பந்து பவுண்டரியை கடந்து விட்டதாக எண்ணிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் இருவரும் நடுக்களத்திற்கு வந்து பேசிக்கொண்டிருந்தார்கள.

 

இதற்கிடையே பீல்டர் ஸ்டார்க் பந்தை எடுத்து கீப்பரை நோக்கி வீசினார். இதையடுத்து அசார் அலி ரன் அவுட்  செய்யப்பட்டார்.இதை சற்றும் எதிர்பாராத அவர் என்ன நடந்தது என்றே தெரியாமல் பரிதாபமாக பெவிலியன் நோக்கி நடையை கட்டினார்.இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்னொரு ரன்-அவுட் சம்பவம் நடந்துள்ளது.

 

நியூசிலாந்து நாட்டில் நடந்த உள்ளூர் போட்டியில் இந்த நகைப்புக்குரிய சம்பவம் நடந்துள்ளது.வெலிங்டன் மற்றும் ஓடாகா அணிகளுக்கு இடையில் நடந்த போட்டியில், நாதன் ஸ்மித் மற்றும் மைக்கெல் ரிப்பன் ஆகிய 2 பேட்ஸ்மேன்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

 

ரிப்பன் லெக்-சைடுக்கு பந்தை விரட்ட, 2 பேட்ஸ்மேன்களும் ஓட ஆரம்பித்தனர். 2 ரன்கள் எடுக்க வாய்ப்பிருந்ததால், ரிப்பன் வேகமாக ஓட முயன்றார். அப்போது அவர் சறுக்கி விழுந்தார். இதைப் பார்த்த ஸ்மித், பாதி வழியிலிருந்து மீண்டும் க்ரீஸுக்கு திரும்ப முயற்சி செய்தார்.

 

ஆனால் அவரும் சறுக்கி விழுந்தார். இறுதியில் ஸ்மித், ரன்-அவுட் ஆகி நடையைக் கட்டினார். இது குறித்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அசார் அலியைத் தொடர்ந்து ஸ்மிதும் பரிதாபமாக ரன்-அவுட் ஆகியுள்ளார்.

Tags : #CRICKET #VOLTS BATSMEN #SMITH