துபாய் நேரப்படி நேற்றிரவு 11.30 மணியளவில் ஸ்ரீதேவி உயிர் பிரிந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்திய நேரப்படி அதிகாலை 3 மணியளவில் தான் ஸ்ரீதேவி உயிரிழந்த சம்பவம் ஊடகங்களில் வெளியானது.
ஆனால் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் நேற்று இரவு 1.15 மணியளவில், " ஏதோ தப்பா படுது.. வித்தியாசமான பதட்டம் நிலவுகிறது.. ஏன் என்று தெரியவில்லை," என டுவீட் செய்திருந்தார்.
அவர் டுவீட் செய்த சற்றுநேரத்தில் ஸ்ரீதேவியின் மரணச்செய்தி வெளியானது. இதனால், ஸ்ரீதேவியின் மரணம் அமிதாப்பின் ஆறாவது அறிவுக்கு முன்பே தெரிந்திருக்கிறது போல, இதனை நம்பவே முடியவில்லை என்று நெட்டிசன்கள் ரியாக்ட் செய்துள்ளனர்.
இதனையடுத்து, நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு முன் அமிதாப்பச்சன் பகிர்ந்த டுவீட் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
T 2625 - न जाने क्यूँ , एक अजीब सी घबराहट हो रही है !!
— Amitabh Bachchan (@SrBachchan) February 24, 2018
BY MANJULA | FEB 25, 2018 11:49 AM #AMITABHBACHCHAN #SRIDEVIDEATH #அமிதாப்பச்சன் #ஸ்ரீதேவிமரணம் #SRIDEVI #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS