
உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால், நேற்று நள்ளிரவு அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. சிலை உடைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடத்திய மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் புதிய சிலை அமைக்கப்படும் என, உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
திரிபுராவில் லெனின், வேலூர் திருப்பத்தூரில் பெரியார், மேற்கு வங்காளத்தில் ஷியாம பிரசாத் முகர்ஜி சிலைகளைத் தொடர்ந்து, மீரட்டில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
BY MANJULA | MAR 7, 2018 3:39 PM #PERIYAR #AMBEDKAR #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories