25 வருஷ மனைவியுடன் உறவுமுறிவு.. உலக பணக்காரர் அந்தஸ்தை இழக்கும் அமேசான் நிறுவனர்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 11, 2019 05:12 PM

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தனது காதல் மனைவியான மெக்கென்சியை  விவாகரத்து செய்வதாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Amazon founder and CEO Jeff Bezos, divorceshis wife of 25 years

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்திலும்,  இன்றைய ஆன்லைன் மார்க்கெட்டிங் உலகின் ராஜாவாகவும் உள்ள  அமேசான் நிறுவனர் ஜெ ஃப் பெசோஸ் கடந்த புதன்கிழமை தனது  மனைவி மெக்கென்சியை விவாகரத்து செய்யப் போவதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் .

1994-ஆம் ஆண்டு ஜெஃப்  பெசோஸால்  ஆன்லைனில்  புத்தகம்  விற்பதற்காக தொடங்கப்பட்ட அமேசான் நிறுவனத்தில் ஒரு  வருடம் கணக்கராக பணிபுரிந்தவர் மெக்கென்சி. இந்நிலையில்  தனக்கும் தன் மனைவிக்குமான  25 ஆண்டு கால திருமண  வாழ்க்கை முடிவுக்கு வருவதாக ஜெஃப் குறிப்பிட்டுள்ளார்.  வளர்ப்பு குழந்தை உட்பட இந்த தம்பதியினருக்கு 4 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது

கடந்த 2012-ஆம் ஆண்டு இந்த தம்பதியினர் $2.5 மில்லியன் டாலரை சட்டப்பூர்வமான  ஒரே பாலின திருமணத்திற்கு ஆதரவாக  அளித்த பிறகு தற்பொழுது மீதம் 137 பில்லியன் டாலர் மதிப்புள்ள  நிறுவனமாக நிற்கும் அமேசானின் சொத்து மதிப்புதான் உலக நிறுவனங்களின் சொத்து மதிப்புகளை விட அதிகம். அதனால்தான் ஜெஃப் உலகிலேயே பெரும் பணக்காரராக உள்ளார். 

ஒருவேளை ஜெஃபிடம் இருந்து ஜீவனாம்சம் முறையில் சொத்துப்பங்கீடு பெற்று மெக்கன்சி பிரிந்தால், உலக பணக்காரர்கள் பட்டியலில் மாற்றங்கள் உருவாகும் என்பதும், அல்லது சரிபாதியாக சொத்துக்கள் பிரிக்கப்பட்டால், மெக்கன்சியும் உலகின் பெரும் பணக்காரர் என்கிற அந்தஸ்தை பெறுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் இவை பற்றிய அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. 

Tags : #AMAZON #LIFE #MARRIAGE #WIFE #HUSBAND #JEFF BEZOS #MACKENZIE #BIROGRAPHY #25YEARS #WORLDRICHEST #DIVORCE