காங்கிரஸ் 'எம்எல்ஏ'-க்கள் தலைமறைவு?.. சித்தராமையா விளக்கம்!
Home > News Shots > தமிழ்By Manjula | May 16, 2018 12:04 PM
புகைப்பட உதவி: ANI
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க 104 தொகுதிகளிலும், ஆளும் காங்கிரஸ் கட்சி 78 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 38 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.ஆட்சி அமைக்க தேவையான 112 தொகுதிகளை எந்த கட்சியும் கைப்பற்றவில்லை. இதனைத்தொடர்ந்து காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்தது.
இதனையடுத்து பா.ஜனதாவும், காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணியும் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் கோரிக்கை விடுத்து உள்ளது. இதற்கிடையில் பாஜக ஆளுநரிடம் ஒருவார காலம் அவகாசம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் இன்று காலை தொடங்கியது.கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏ-க்களும் நிச்சயம் பங்கேற்க வேண்டுமென்று சொல்லப்பட்டிருந்த நிலையில், 4 எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மேலும், அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய சித்தராமையா, ''அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களும் தொடர்பில் உள்ளனர். எந்த எம்.எல்.ஏவும் மாயம் ஆகவில்லை,'' என்று கூறியுள்ளார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- "Yeddyurappa is mentally disturbed if...": Siddaramaiah
- Shocking - 10,000 voter ids found in apartment in Bangalore
- "Currently there is only water for our state": Karnataka govt
- Can’t release Cauvery water due to shortage of rainfall: Karnataka to SC
- "Where is the water for us to release?" Siddaramaiah reacts to SC order