'நாங்களும் இருக்கிறோம் '..கேரளாவிற்கு கைகொடுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் !
Home > News Shots > தமிழ்By Jeno | Aug 17, 2018 11:57 AM
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கேரள மாநிலத்தில் கடந்த 8 நாட்களுக்கும் மேலாகப் பெருமழை பெய்து வருகிறது. இதுவரை மழைவெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்டர் பலியாகியுள்ளனர், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 14-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ள நீரில் பாதிக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தில் உள்ள 39 அணைகளில் 35 அணைகள் நிரம்பித் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாநிலத்தின் பெரும்பகுதி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரள மக்களுக்கு உதவும் வகையில், மாநிலத்தில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அடுத்த 7 நாட்களுக்கு இலவச கால்கள், டேட்டாகளை பயன்படுத்திக்கொள்ள மக்களுக்கு அனுமதித்துள்ளன.அதேபோல போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் பில்கட்டணத்தை தாமதமாகச் செலுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளன.
அரசு நிறுவனமான பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்கள் இலவச சேவையை அறிவித்துள்ளன.
இந்த 5 தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 7 நாட்களுக்குக் குறிப்பிட்ட அளவுக்குப் பேசிக்கொள்ள அனுமதித்துள்ளன. அதேபோல போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்கள் தங்களின் பில்கட்டணத்தை தாமதமாகச் செலுத்திக்கொள்ள அனுமதித்துள்ளன.
மேலும், அடுத்த 7 நாட்களுக்கு ஒவ்வொரு ப்ரீபெய்ட் வாடிக்கையாளருக்கும் ஒரு ஜிபி நாள்தோறும் இலவசமாக வழங்கப்படும் என்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
மேலும், திருச்சூர், கள்ளிக்கோட்டை, மலப்புரம், கண்ணூர், கோட்டயம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் தங்களின் மொபைல்போன்களை சார்ஜ் செய்யும் மையங்களையும், தற்காலிக பைவை மையங்களையும் ஏர்டெல் நிறுவனம் தொடங்கியுள்ளது.