‘நீங்களும் 2.0-வின் வில்லன் ஆகலாம்’.. இத ட்ரை பண்ணுங்க!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Nov 26, 2018 05:34 PM
![Akshay Kumar Releases Evil Camera Effect of 2.0 villain Try this here Akshay Kumar Releases Evil Camera Effect of 2.0 villain Try this here](https://i6.behindwoods.com/news-shots/images/tamil-news/akshay-kumar-releases-evil-camera-effect-of-20-villain-try-this-here.jpg)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இயக்குநர் ஷங்கர் உருவாக்கியிருக்கும் பிரம்மாண்டமான படைப்பு 2.0. மிக விரைவில் வெளியாகவிருக்கும் இப்படத்தில் எமி ஜாக்சனும், அக்ஷய்குமாரும் நடித்துள்ளனர். கூடுதலாக படத்தின் முதல் பாகத்தில் இருக்கும் சிட்டி ரோபோ, ரீபோடடு வெர்ஷன் 2.0 என்கிற வகையில் வந்து நம்மை மகிழ்விக்கவிருக்கிறது.
மேலும் இப்படத்தின் புதிய கதாபாத்திரமாக கொடூரம்-குரூரம் நிறைந்த சாத்தானும்-அரக்கனும் கலந்து வில்லனாக அக்ஷய் குமார் பட்டையை கிளப்பியுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், நடிகர் அக்ஷய் குமார், 2.0-படத்தின் எவில் கேரக்டர் வருமாறு வடிவமைக்கப்பட்டுள்ள பேஸ்புக் மெசஞ்ஜர் கேமரா எஃபெக்டை அறிமுகப்படுத்தி தனது ட்வீட் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளதோடு, தானும் இதனை முயற்சித்து அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் இந்த புதிய எஃபெக்டை அறிமுகப்படுத்தியதில் இருந்தே, ஃபிரண்ட் கேமராவின் முன்னால் முகத்தை வைத்துக்கொண்டு இந்த எஃபெக்டை முயற்சித்து குதூகலம் அடைந்துகொண்டிருக்கின்றனர். முதலில் கொடூர வேம்பையர் டிராகுலா போல் நம் பற்கள் மாற, மெல்ல மெல்ல 2.0-வின் வில்லனாக நாம் மாறுவதை நாம் புகைப்படங்களாகும் வீடியோக்களாகவும் க்ளிக்கி கொள்ளலாம்.
நீங்க இதை ட்ரை பண்ண இந்த லிங்க்’கினை க்ளிக் பண்ணுங்க.. https://www.facebook.com/fbcameraeffects/tryit/310864109642512/
The new face of evil will unveil in 3 days, experience it yourself with the #2Point0Filter! Try now - https://t.co/ryQjQpOV6k@2Point0Movie @shankarshanmugh @DharmaMovies @LycaProductions #2Point0FromNov29 pic.twitter.com/en8EW4lOZe
— Akshay Kumar (@akshaykumar) November 26, 2018
![](https://www.behindwoods.com/images/spacer.gif)