
தொடர்ந்து சால்ட் & பெப்பர் ஹேர்ஸ்டைலில் நடித்து வந்த அஜீத், 'விசுவாசம்' படத்தில் இளமையான தோற்றத்தில் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
இதனை உறுதி செய்வது போல அஜீத் இளமையாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகின. ஆனால், இன்று(பிப்ரவரி 10) நடைபெற்ற பள்ளிக்கூட விழாவொன்றில் மனைவி ஷாலினி, மகள் அனௌஷ்காவுடன் அஜீத் கலந்து கொண்டுள்ளார்.
இது தொடர்பான சிறு வீடியோ ஒன்றும் வெளியானது. அதில் சால்ட்& பெப்பர் லுக் தோற்றத்தில் அஜீத் காணப்படுகிறார். இதனால் 'விசுவாசம்' படத்தில் 'தல' சால்ட்&பெப்பர் ஹேர்ஸ்டைலையே தொடரப் போகிறாரா? இல்லை மீண்டும் பழைய தோற்றத்துக்குத் திரும்புவாரா? என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
BY MANJULA | FEB 10, 2018 5:58 PM #VISWASAM #AJITH #THALA #விசுவாசம் #அஜீத் #தல #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories