காரைவிட 'விமான டிக்கெட் கம்மி'.. புதுச்சேரி-சென்னை விமானசேவை தொடக்கம்!
Home > News Shots > தமிழ்By Manjula | May 07, 2018 03:47 PM

வருகின்ற ஜூலை 15-ம் தேதி முதல் புதுச்சேரியில் இருந்து சென்னை மற்றும் சேலத்துக்கு புதிய விமான சேவையைத் தொடங்க உள்ளது, ஏர் ஒடிஷா நிறுவனம்.
அதன்படி, சென்னையிலிருந்து காலை 8.10 மணிக்கு புறப்படும் விமானம், காலை 8.55 மணிக்கு புதுச்சேரி வந்தடையும். மீண்டும், மதியம் 1.15 மணிக்கு புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு, மதியம் 2 மணிக்கு சென்னையைச் சென்றடையும்.
அதேபோல, காலை 9.10 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் விமானம், காலை 10 மணிக்கு சேலம் சென்றடையும். மீண்டும், மதியம் 12.15 மணிக்கு சேலத்திலிருந்து புறப்பட்டு, மதியம் 1 மணிக்கு புதுச்சேரி வந்தடையும். இந்த பயணத்துக்கான முன்பதிவினை www.airodisha.com என்ற இணையதளத்தின் வழியாக செய்து கொள்ளலாம்.
வாடகைக்காரில் சென்னை டூ புதுச்சேரி சென்றால் 3000 ரூபாய் வரையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேநேரம் விமானத்தில் 1940 ரூபாய் மட்டுமே கட்டணம் என்பது குறிப்பிடத்தக்கது. போனசாக பயண நேரமும் 45 நிமிடங்கள் தான் என்பதால், சுற்றுலாவாசிகளுக்கு இது நல்லதொரு விஷயமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டண விவரங்கள்:-
1. சென்னை - புதுச்சேரி ரூ.1,940. 2. புதுச்சேரி - சென்னை ரூ.1,470. 3. புதுச்சேரி - சேலம் ரூ.1,550. 4. சேலம் - புதுச்சேரி ரூ.1,550.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS
