மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை?: தமிழிசை-விஜயபாஸ்கரின் ஒருமித்த கருத்து!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Sep 30, 2018 11:51 AM
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான பூர்வாங்கப்பணிகள் அனைத்தும் படிப்படியாக துறைவாரியாக மத்திய மாநில அமைச்சகங்களில் அரசாங்க நடைமுறைப்படி செய்யப்பட்டுவருவதாக தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியுள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான பணிகள் நடைபெற்று வரும் இந்த சூழலில் இந்த மிகப்பெரிய திட்டத்திற்கான இறுதி திட்ட அறிக்கை தயாரானதுமே நிதிஒதுக்கி அரசாணை வரும் என்பதுதான் நடைமுறை என்றும் தமிழக மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியில் சுதந்திரம் அடைந்தபின்னர் 60 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனை, 9 இடங்களில் மட்டுமே கொண்டுவரப்பட்டதாகவும், ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் பாஜக தலைம்யிலான அரசு, கிட்டத்திட்ட 14 இடங்களில் எய்ம்ஸ் மாடல் மருத்துவமனைகளை புதிதாக அமைப்பதற்கான கொள்கை முடிவினை எடுத்து, அதற்கென செயலாற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் உறுதியாக மதுரையில் விரைவில் எய்ம்ஸ் அமையும் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இதேபோல் அதிமுக-வைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் எய்ம்ஸ் மருத்துவமனை வருவது உறுதி எனும் இதே கருத்தை உறுதியாகக் கூறியுள்ளார்.