தகாத உறவு தொடர்பான பிரிவு 497 ரத்து: உச்சநீதிமன்றத்தின் முழு தீர்ப்பு விபரம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 27, 2018 12:50 PM
Adultery no longer a Crime, Supreme Court strikes down Section 497 IPC

வயது வந்த ஆண் மற்றும் பெண் இடையேயான தகாத உறவு கிரிமினல் குற்றம் ஆகாது என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. ஒரு பெண்ணுடைய முதலாளியாக அதிகாரம் மிக்க ஒருவராக கணவனை ஒருபோதும் கருத முடியாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், முன்னதாக பிரிவு 497-ன் படி மணமான ஒரு பெண்மணியுடன் வேறு ஒரு ஆண் உறவில் அல்லது தொடர்பில் இருந்தால் குற்றம;  ஆனால் அதே சமயம் மணமான பெண்ணுடன் தொடர்புடைய ஆணுக்கு 5 ஆண்டு தண்டனை என்று கடுமையாக இருந்ததை சுட்டிக் காட்டியது.

 

இந்நிலையில் மேற்கண்ட பிரிவு 497-ன் இரத்து செய்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட 5 நீதிபதிகள் கொண்ட நீதிமன்ற அமர்வு, ஆணுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்தால் மனைவி விவாகரத்து கேட்கலாம் என்றும் அதேசமயம் மனைவிக்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்பு இருந்தால் கணவன் விவாகரத்து கோரலாம் என்றும் கூறி,  ஆனால் வயது வந்த ஆண் மற்றும் பெண் இடையேயான தகாத உறவு என்று சொல்லப்படுகிற கள்ள உறவு அல்லது கள்ளக்காதலை கிரிமினல் குற்றம் என்று கருதி தண்டனை கொடுத்தல் ஆகாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Tags : #SECTION497 #ADULTERYLAWVERDICT #SUPREMECOURT