
சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அரவிந்த் சாமி என முன்னணி நடிகர்-நடிகைகளை ஒன்றிணைத்து, மணிரத்னம் தனது புதிய படத்தை இயக்கவுள்ளார்.
இந்த நிலையில், 'காற்று வெளியிடை' ஹீரோயின் அதிதி ராவ் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. "சிலிர்ப்பாக உள்ளது. எனது பழைய இடத்திற்கே திரும்பி வருகிறேன். நன்றி" என நடிகை அதிதி ராவும் இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
'காற்று வெளியிடை' படத்தைத் தொடர்ந்து அதிதி ராவுக்கு இது மணிரத்னத்துடன் 2-வது படம், என்பது குறிப்பிடத்தக்கது.
BY MANJULA | FEB 2, 2018 8:12 PM #SIMBU #VIJAYSEHUPATHI #ADITIRAOHYDARI #சிம்பு #விஜய்சேதுபதி #அதிதிராவ்ஹைதாரி #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories