நடிகை ஸ்ரீதேவி எதிர்பாராதவிதமாக, குளியலறையில் மூழ்கி உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடைமுறை பரிசோதனைகள் காரணமாக, அவரது உடலை மும்பை கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை கொச்சைப்படுத்த வேண்டாம் என நடிகை வித்யூ ராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், " மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஒரு கண்ணியமான வாழ்க்கையை வாழ்ந்தவர். சினிமாத்துறைக்கு அவர் ஆற்றிய பங்கு மகத்தானது.
தயவுசெய்து அவரது மரணத்தை யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம். அவரது மரணம் குறித்த தவறான செய்திகளைக் கேட்கும்போது, வருத்தமாக உள்ளது. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்," என தெரிவித்துள்ளார்.
She led a dignified life. Her contribution to the film industry was immense! Please don’t insult her death like this, media!! It’s sickening hearing the stories being spread. Let her soul REST IN PEACE #RIPSridevi
— Vidyu Raman (@VidyuRaman) February 27, 2018
BY MANJULA | FEB 27, 2018 11:57 AM #SRIDEVI #SRIDEVIDEATH #VIDYURAMAN #வித்யூராமன் #ஸ்ரீதேவி #ஸ்ரீதேவிமரணம் #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS