
திடீர் மாரடைப்பு காரணமாக நடிகை ஸ்ரீதேவி நேற்றிரவு துபாயில் உயிரிழந்தார். இது அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், நடிகை ஸ்ரீதேவியின் பிரேத பரிசோதனை குறித்து முழுமையான அறிக்கை தயாராகாத காரணத்தால், அவரது உடல் தனி விமானத்தில் நாளை காலை மும்பை கொண்டு வரப்படும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், மும்பையில் உள்ள ஸ்ரீதேவி வீட்டில் நாளை காலை 9-மணி முதல் 11.30 மணி வரை அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், நாளை நண்பகல் 12 மணியளவில் அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.
நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மும்பையில் உள்ள அவரது வீட்டின் முன் குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
BY MANJULA | FEB 25, 2018 10:35 PM #SRIDEVI #SRIDEVIDEATH #ஸ்ரீதேவி #ஸ்ரீதேவிமரணம் #இறுதிச்சடங்கு #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories