
துபாயில் இறந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல், இன்று இரவு தனி விமானத்தில் மும்பைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இதுகுறித்து கல்ஃப் நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில், "ஸ்ரீதேவியின் பிரேத பரிசோதனை மற்றும் தடவியல் அறிக்கை சற்றுமுன் வெளியானது. அதில் நடிகை ஸ்ரீதேவி எதிர்பாராதவிதமாக குளியலறையில் மூழ்கி உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இதில் எந்தவிதமான குற்றவியல் நோக்கமும் இல்லையென்றும், நடிகை ஸ்ரீதேவியின் மரணம் எதிர்பாராத விபத்து எனவும்,'' எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BY MANJULA | FEB 26, 2018 5:21 PM #SRIDEVI #SRIDEVIDEATH #ஸ்ரீதேவி #ஸ்ரீதேவிமரணம் #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS

Read More News Stories