கடந்த ஒருவார காலமாக, சிரியாவில் சிரிய - ரஷ்ய கூட்டுப் படைகள் கடும் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதலில், 100 குழந்தைகள் உட்பட இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்த கொடூர தாக்குதலுக்கு எதிராக உலகம் முழுவதுமிருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், நடிகர் விவேக்கும் தனது கண்டனத்தினை வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "சிரியா குழந்தைகளின் கதறல் உலக நாடுகளின் காதில் விழவில்லையா? ஐ.நா வுக்கு கண் இல்லையா?இதை விவாதிக்க சர்வ தேச நீதி அமைப்புகளுக்கு வாய் இல்லையா? இந்தக் கொடுமை தீர வழி இல்லையா? அன்று ஶ்ரீலங்கா இன்று சிரியா! ஆக,யாருக்குமே இதயம் இல்லையா? I feel guilty to witness ‘‘tis cruelty," என ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிரியா குழந்தைகளின் கதறல் உலக நாடுகளின் காதில் விழவில்லையா? ஐ.நா வுக்கு கண் இல்லையா?இதை விவாதிக்க சர்வ தேச நீதி அமைப்புகளுக்கு வாய் இல்லையா? இந்தக் கொடுமை தீர வழி இல்லையா? அன்று ஶ்ரீலங்கா இன்று சிரியா! ஆக,யாருக்குமே இதயம் இல்லையா? I feel guilty to witness ‘‘tis cruelty pic.twitter.com/sosdftOxfH
— Vivekh actor (@Actor_Vivek) February 27, 2018
BY MANJULA | FEB 27, 2018 7:10 PM #VIVEK #SYRIASTRIKE #விவேக் #சிரியாதாக்குதல் #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS