
நடிகர் விஜய் தற்போது 'தளபதி 62' படத்தில் பிசியாக இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், தனது பிசியான ஷெட்யூல்களுக்கு மத்தியிலும் சென்னையில் உள்ள பள்ளி ஒன்றிற்கு, நடிகர் விஜய் சென்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
இதற்கான காரணம் என்னவென்று நாம் விசாரித்ததில், மகள் திவ்யா பேட்மிண்டன் போட்டியில் விளையாடுவதை நேரில் பார்த்து உற்சாகப்படுத்தவே விஜய் பள்ளிக்கு திடீர் விசிட் அடித்ததாகக் கூறப்படுகிறது.
வழக்கம்போல தனது டிரேட்மார்க் அமைதியுடன் விஜய், திவ்யா விளையாடுவதைப் பார்த்து ரசிக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாகப் பரவி வருகின்றன.
BY MANJULA | MAR 3, 2018 12:00 PM #VIJAY #THALAPATHY62 #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS

Read More News Stories