Biggest Icon of Tamil Cinema All Banner

பிக்பாஸ் புகழ் சுஜா வருணியின் 'அத்தான்' நான்தான்: நடிகர் விளக்கம்

Home > News Shots > தமிழ்

By |
Actor ShivaKumar talks about his relationship status with Suja Varunee

'பிக்பாஸ்' புகழ் சுஜா வருணியின் 'அத்தான்' நான்தான் என நடிகரும், மறைந்த சிவாஜி கணேசனின் பேரனுமான நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

 

சுஜா வருணியுடனான உறவு குறித்து நடிகர் சிவக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர்,"சுஜா வருணியை நான் 11 ஆண்டுகளாகக் காதலித்து வருகிறேன். எனது இயற்பெயர் சிவக்குமார். 2 வருடங்களுக்கு முன் எனது அம்மா இறந்து விட்டார்.

 

எனது அம்மாவின் ஆசியுடன் சிவாஜி தேவ்வில் இருந்து சிவக்குமார் என என்னுடைய பெயரை மாற்றிக்கொண்டேன். இனி இந்த பெயருடன் தான் திரைப்பயணத்தைத் தொடர்வேன்.

 

பிக்பாஸ் வீட்டில் சுஜா கூறிய அத்தான் நான்தான். விரைவில் எங்களது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவோம். அதுவரை இந்த விஷயத்தில் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,''இவ்வாறு நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags : #SUJAVARUNEE #BIGGBOSS

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Actor ShivaKumar talks about his relationship status with Suja Varunee | தமிழ் News.