கடந்த 2002-ம் ஆண்டு வெளியாகி இன்றளவும் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் படம் 'கன்னத்தில் முத்தமிட்டால்'.
ஈழப்போரின் வலிகள், தாயைப்பிரிந்த சிறுமியின் நிலை என பார்வையாளர்களை உணர்வுப்பூர்வமாக கட்டிப்போட்ட இப்படத்தில், அம்மாவைப்பிரிந்த சிறுமியாக நடிப்பில் மிரட்டிய கீர்த்தனா பார்த்திபன் தற்போது திருமணத்திற்குத் தயாராகி விட்டார்.
வருகின்ற மார்ச் 8-ம் தேதி பெண்கள் தினத்தன்று கீர்த்தனாவின் திருமணம், நடைபெறவிருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
கார்த்தி-அதிதி ராவ் நடிப்பில் வெளியான 'காற்று வெளியிடை' படத்தில் மணிரத்னத்தின் உதவி இயக்குநராக, கீர்த்தனா பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு தெய்வம் தந்த பூவே...