ஜோதிகா-ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியான, 'நாச்சியார்' படத்துக்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.
இந்த நிலையில், நடிகர் கார்த்தி இப்படம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்து தள்ளியுள்ளார். அதில், "நாச்சியார் ஒரு தெளிவான திரைக்கதை, அழுத்தமான முறையில் சொல்லப்பட்டுள்ளது.
பாலா சார் படத்தில் நேர்மறையான கதாபாத்திரங்கள், நேர்மறையான முடிவுகளைப் பார்ப்பது நன்றாக உள்ளது. அண்ணியும்(ஜோதிகா), ஜிவியும் (ஜி.வி.பிரகாஷ்) அழுத்தமான கதாபாத்திரங்களில் நன்றாக நடித்துள்ளனர்," என பாராட்டி இருக்கிறார்.
OTHER NEWS SHOTS
Read More News Stories