
ஸ்ரீதேவி நடித்த 'மாம்' படத்தில் அவரது கணவராக பாகிஸ்தான் நடிகர் அட்னான் சித்திக் நடித்திருந்தார். கடந்த சனிக்கிழமை ஸ்ரீதேவி மரணமடைந்த போது துபாயில் இருந்த வெகுசிலரில் சித்திக்கும் ஒருவர்.
இந்த நிலையில், ஸ்ரீதேவி இறந்ததைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவரது கணவர் போனி கபூர் குழந்தை போல வெகுநேரம் அழுததாக, அட்னான் சித்திக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "ஸ்ரீதேவி மரணித்ததைக் கண்டு போனி கபூர் குழந்தை போல அழுதார். அவரால் அழுகையை நிறுத்தவே முடியவில்லை,'' என்றார்.
போனி கபூர் அழைப்பின் பேரில், சனிக்கிழமை இரவு 11 மணிக்கு ஸ்ரீதேவி தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்ற சித்திக், விடிகாலை 5 மணிவரையில் அவருடன் உடனிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
BY MANJULA | FEB 27, 2018 12:58 PM #SRIDEVI #SRIDEVIDEATH #BONEYKAPOOR #ஸ்ரீதேவி #ஸ்ரீதேவிமரணம் #போனிகபூர் #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories