பேரிடரில் சிக்கிய நாய்க்குட்டிக்கு அடைக்கலம்: வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Sep 25, 2018 03:23 PM
பேரிடர் காலங்களில் மனிதர்கள் தம்மைக் காத்துக்கொள்கிற அளவுக்கு விலங்குகளால் தம்மை தற்காத்துக்கொள்ளுதல் எளிதான காரியம் இல்லை. அவற்றின் நிலை மழை பொழிவு அதிகமாக இருக்கும் சூழல்களிலேயே மிகவும் பரிதாபத்துக்குரியதாகிவிடும்.
செல்லப் பிராணிகள் அல்லது வளர்ப்புப் பிராணிகளுக்கே இந்த நிலை என்றால், ஆதரவற்று தெருக்களில் கிடக்கும் பிராணிகளின் நிலை இன்னும் கவலைக்கிடம்தான். சக உயிரிகளிடம் அன்பு செலுத்தும் மனிதர்கள் இன்னும் இருப்பதாலோ என்னவோ, இந்த பேரிடர்களைக் கடந்து உலகம் நிலைபெற்று நிற்கிறது.
அப்படித்தான் கடந்த வருடம் துருக்கி இஸ்டான்புல்லில் ஒரு பேரிடர் சூழலில், ஆதரவற்று தவித்த நாய்க்குட்டிக்கு போர்த்திவிடும் மனிதநேயம் மிக்க பெண் மற்றும் போர்வையை போர்த்திக்கொண்டு படுத்திருக்கு அந்த நாய்க்குட்டியின் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாகி வருகிறது.